மேற்கு வங்க தேர்தல் பணிகளில் பிசியாக இருக்கும் பிரதமர் மோடிக்கு,கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் உயிரைப் பற்றி அக்கறை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கொரோனா வைரஸினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதற்கு இடையில் கேரளா,தமிழ்நாடு,புதுச்சேரி,அசாம் மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் முடிவடைந்துள்ளன,மேலும் வாக்குப்பதிவானது மே 2 ஆம் தேதியன்று எண்ணப்படும்.
ஆனால்,மேற்கு வங்கத்தில்,294 தொகுதிகளில் 8 கட்டங்களாக மாநில சட்ட சபை தேர்தலானது நடைபெறுகிறது.இதில் முதல் 4 கட்ட தேர்தல் முடிவடைந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.மேலும் தேர்தலில் 5 ஆம் கட்ட தேர்தலானது ஏப்ரல் 17 இல் நடைபெற உள்ள நிலையில்,வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி குறித்து,மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியாதவது:”கொரோனா வைரஸ் தொற்றானது நாடு முழுவதும் அதிகமாக பரவி வருவது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால்,பிரதமர் மோடியோ தற்போது மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்.அவருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்களைப் பற்றி கவலை இல்லை.மேற்கு வங்க தேர்தலை முடித்த பிறகுதான் பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிப்பார்”,எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…