தேர்தல் பத்திரங்கள் என்ற புதிய திட்டம் !பீதியில் அரசியல் கட்சிகள் ..நன்கொடைக்கு கடிவாளம் …

Default Image

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்தும் வகையில், கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, எலெக்ட்ரல் பான்ட்  எனப்படும் தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்படும் என்றார். இந்நிலையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றிற்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, செவ்வாய்க்கிழமை, மக்களவையில், எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வரையறைகளை மத்திய அரசு இறுதி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள குறிப்பிட்ட எஸ்.பி.ஐ வங்கி கிளைகளில் மட்டும் இந்த தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.
இந்த பத்திரங்கள், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், ஒரு லட்ச ரூபாய், 10 லட்ச ரூபாய், ஒரு கோடி என்ற மதிப்புகளில் வழங்கப்படும். SBI வங்கி கிளைகளில், ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில், தலா 10 பணி நாட்களில் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். அதுவே பொதுதேர்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும், அந்த குறிப்பிட்ட மாதங்களில் 30 நாட்களும் தேர்தல் பத்திரங்களை பெறலாம். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கும் கொடையாளரின் பெயர் இந்த தேர்தல் பத்திரத்தில் இடம்பெறாது. ஆனால், அந்த தேர்தல் பத்திரத்தை பெறுவோர், சுயவிவர குறிப்பை வங்கியிடம் அளிக்க வேண்டும்.
இந்த தேர்தல் பத்திர முறை மூலம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடை வழங்க இயலும். தேர்தல் பத்திரம், நன்கொடையாளர் வாங்கிய நாளிலிருந்து 15 நாட்கள் மட்டுமே செல்லும்… நன்கொடையாளரிடமிருந்து தேர்தல் பத்திரத்தை பெறும் அரசியல் கட்சிகள், அது வாங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்ளாக மட்டுமே பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.. நன்கொடையாளரிடமிருந்து தேர்தல் பத்திரத்தை பெறும் அரசியல் கட்சி, தனது வங்கி கணக்கில் இந்த பத்திரத்தை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்திய குடிமகன் அல்லது இந்தியாவில் செயல்படும் நிறுவனமோ இந்த தேர்தல் பத்திரத்தை பெற்று, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்