தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளருக்கு தனி வங்கிக்கணக்கு – சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு..!
புதுடெல்லி:
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் போட்டியிடும் போது அவர்கள் குறிப்பட தொகை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என விதிகள் உள்ளன. தேர்தல் முடிந்த பின்னர், வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கை தாக்க வேண்டும். அலுவலர்களால் அந்த கணக்கு சரிபார்க்கப்படும்.
இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகளுக்கு என தனி வங்கிக்கணக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட பின் இந்த வங்கிகணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.