தேர்தல் குறித்து ராகுல் காந்தி கருத்து : மக்களின் கருத்தை ஏற்றுகொள்கிறோம்
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலத்திலும் பாஜக வெற்றியடைந்துள்ளது. அதற்க்கு ஓரளவு கடும் சவாலாக அமைந்தது காங்கிரஸ் கட்சி. இரு மாநிலத்திலும் அரியணை ஏற உள்ளது. இதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,
‘மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உள்ள புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத், இமாச்சல பிரதேச மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் சகோதர சகோதரிகளே, என்னை நீங்கள் பெருமை பட வைத்துள்ளீர்கள். அனைவருக்காகவும் நீங்கள் பாடுபட்டீர்கள். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் பலம் அதன் ஒழுக்கமும் துணிவும்தான்’ என்று கூறினார்.
மேலும் படிக்க dinasuvadu.com