தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள்..!பிரதமர் நரேந்திர மோடி
தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம்.வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்.சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.