தேர்தலில் வயது வரம்பு….எங்களுக்கு அதிகாரம் இல்லை…உச்ச நீதிமன்றம் அதிரடி..!!
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் வயது வரம்பை 25-ல் இருந்து 18-ஆக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.இந்த திருத்தங்களை நீதிமன்றம் செய்ய முடியாது என்பதால் பொதுநல மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் கூறினர்.
dinasuvadu.com