தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பா.ஜ.க.பிரமுகர் குலுங்கி குலுங்கி அழுகை !

Default Image

இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சீட் கிடைக்காத காங்கிரஸ், பாஜக பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனைகளில் 23 கோடி ரூபாய் ரொக்கமும், ஏராளமான பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

Image result for BJP MEMBER Shashil  Namoshi

இதனிடையே, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாண்டியா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பிரபலங்களின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குல்பர்கா மாவட்டத்தில் போராட்டம் வெடித்தது. நமோஷி என்பவரின் ஆதரவாளர்கள் சாலையில் திரண்டு, டயர்களை தீயிட்டு கொளுத்தி, பாஜக தலைமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத பா.ஜ.க.பிரமுகர் ஷாஷி நமோஷி ((Shashil Namoshi)) குலுங்கி குலுங்கி அழுதார். செய்தியாளர் சந்திப்பில் பேச முனைந்த அவர், ஒரு கட்டத்தில் சோகம் தாளாமல் வாய்விட்டு அழுதார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்