தேர்தலில் பண புழக்கத்தை தடுக்க பணமதிப்பிழப்பு உதவவில்லை…முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் அதிரடி…!!
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் தேர்தல் காலங்களில், பணப் புழக்கம் குறையவில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், பண மதிப்பிழப்பு நடவடிக்கை தேர்தல் நேரங்களில் பணப் புழக்கத்தை தடுக்க உதவவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலங்களில், கைப்பற்ற பட்ட பணத்தை விட, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அதிக பணம், தேர்தல் நேரங்களில் கைப்பற்றப்பட்டதாக ஓ.பி.ராவத் கூறினார்.
dinasuvadu.com