தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டம்..!
இளைஞர்களின் திறனை மேம்படுத்த தேசிய அளவிலான மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் இளைஞர்கள் படிப்பு முடித்து வெளியேறுவதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு திறமையின்மையால் வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய ஸ்கில் இந்தியா திட்டத்தின் படி அதன் இலக்கு 2022-க்குள் 40 கோ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாகும்.
தற்போது வரை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இரண்டரை கோடி பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலக்கை எட்டுவதற்கும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த தகவல் மையம் ஒன்றை உருவாக்கும் ஆய்வில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.