தெலுங்கானாவில் 8 மாவோஸ்டுகள் சுட்டு கொலை
தெலுங்கானாவில் மாவோஸ்டுகள் அதிகமாக நடமாடுவதாக வந்த தகவலின் பெயரில் 8 மாவோஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாரத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவது தெரிந்தவுடன் கிராம மக்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடி படையினருடன் சென்று, பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிசண்டை இன்று காலை முடிவுக்கு வந்தது.
இந்த தாக்குதலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.