தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது.
கரீம்நகர் மாவட்டம் சங்கர பட்டினம் அருகேயுள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாயி தீபிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் இவர்களின் காதலை ஏற்கவில்லை.
இந்நிலையில், குமாரை கடந்த ஞாயிறன்று இரவு 9 மணிக்கு பிறகு காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தங்களது மகனை காணவில்லை என குமாரின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குமாரை போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, உடலில் வெட்டுக் காயங்களுடன் குமாரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குமாரின் பெற்றோரும், உறவினர்களும் சடலத்தைப் பார்த்து கண்ணீர் விட்டனர். மேலும், குமாரின் காதலி சாயி தீபிகாவும், சடலம் அருகே அமர்ந்து கதறி அழுதார். இந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக வைத்தது.
போலீசாரின் அலட்சியத்தாலே குமார் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறை வாகனத்தையும் அவர்கள் தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. குமார்- சாயி தீபிகா காதலால் இருவரின் பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தன்னை நான்குபேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்ததாக, குமார் தனது காதலிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பின்னரே குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால், அவர் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன், ஒருவர் ஆணவ கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் கொலை முயற்சியில் உயிர்தப்பினார். மீண்டும் அதே மாநிலத்தில், ஒரு ஆணவ கொலை நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…