தெலுங்கானாவில் பாஜக தனித்து போட்டியிட முடிவு..!
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஹைதராபாத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தெலுங்கானா மாநிலத்தின் 119 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப்போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என அவர் அப்போது கூறினார்.
எந்த கட்சியுடனாவது கூட்டணி அமைக்கப்படுமா என்பதை கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் உரிய காலகட்டத்திலேயே நடைபெறும் என்றும், முன்கூட்டியே நடத்தப்படாது என்பதையும் அமித்ஷா மறைமுகமாகக் குறிப்பிட்டார்.