தென் கொரியா -இந்தியா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.நேற்று முன்தினம் இந்திய வந்த இவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.பின்னர் இந்தியாவில் அவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வடகொரியா அதிபர் மூன் ஜே இன் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது தென் கொரியா -இந்தியா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
இதில் இருநாடுகளின் பொருளாதாரம் ,உயிரி தொழில்நுட்பம்,உயிரி பொருளாதாரம்,தொலைத்தொடர்பு உட்பட 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியது.