தென் ஆப்பிரிக்காவை வென்று இந்திய ஹாக்கி அணி சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. உள்நாட்டில் நடக்கும் போட்டி என்பதால் இந்திய ஹாக்கி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் நாள் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் இந்தியா 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இது குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி வியத்தகு வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளதாக பாராட்டியுள்ளார். எதிர் வரும் போட்டிகளிலும் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…