தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முதன்முதலாக இந்தியா வருகை!
தென் கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே இன் முதன்முதலாக இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார்.ஜூலை 8 ஆம் தேதி வரும் மூன் ஜே இன், இந்தியாவில் வந்து, 11 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளை விவாதிக்க உள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதியின் அலுவலகமான ப்ளூ ஹவுஸ் இந்தியாவில் முதல் முறையாக இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திப்பதாக அறிவித்துள்ளது.தென் கொரிய அதிபர் அலுவலகம் 8-ம் தேதி முதல், இந்தியாவில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற பின் , தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்,இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.