தூய்மைஇந்தியா திட்டம்-ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து, பிரபலங்களை தூதர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘‘நாடு முழுவதும் தூய்மைப்பணி குறித்த ஆய்வு ஜனவரி 4ல் தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆயிரம் நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’’என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பைகளின் அளவும் அதிகரித்துள்ளது. மேலும் கழிப்பறைகளும் அதிகளவில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நகர்புறங்களில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கிராமங்களில் போதிய கழிவறை வசதி இல்லாததால், அவைகளை கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.