தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது..!!அகிலேஷ் யாதவ்
வளர்ச்சி என்ற ஒற்றை வாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நாளிதழ் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுபோன்ற வளர்ச்சியால், சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கங்கை வற்றிப்போவதாகவும், யமுனை மரிப்பதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்