தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது சாலை அமைத்த ஊழியர்கள்! மக்கள் கடும் எதிர்ப்பு!
சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது உத்தரப்பிரதேசத்தில் சாலை அமைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் புகழ்பெற்ற தாஜ்மகால் அருகே சாலை அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது கொதிக்கும் தாரை ஊற்றினர்.
இதனால் படுகாயமடைந்த நாய் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விடவே, இதையடுத்து சாலைப்பணியாளர்கள் இறந்த நாயைக் கூட அப்புறப்படுத்தாமல் அதன் இடுப்புப் பகுதி சாலையில் இருக்கும் போதே கற்களைக் கொட்டி, சாலை அமைக்கும் இயந்திரம் மூலம் முழு சாலையையும் அமைத்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, பொதுப்பணித்துறையினரை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து புதிய சாலை தோண்டப்பட்டு இறந்த நாய் அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.