துளியும் அசராத அணில் அகர்வால் ! 5,320 கோடியில் அடுத்த திட்டம் ரெடி..!
தூத்துக்குடியில் 13 நபர்களைச் சுட்டுக்கொன்ற பிறகு வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை மேற்கு வங்கத்தில் திவால் ஆன நிலையில் உள்ள எலெக்டோஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தினை அனில் அகர்வால் வாங்கியுள்ளார்.
பங்கு சந்தைக்குத் தெரிவித்துள்ள விவரங்களின் படி வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான வேதாந்தா ஸ்டார் லிமிடெட் நிறுவனம் 5,320 கோடி ரூபாய் கொடுத்து எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தினைக் கையகப்படுத்தியுள்ளது.
வேதாந்தா ஸ்டார் லிமிடெட் நிறுவனம் 1,765 கோடி ரூபாயினைப் பங்குகள் மூலமாகவும், 3,555 கோடி ரூபாயினை நிறுவனங்களுக்கு உள்ளான கடன் கீழும் அளித்து எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தினைக் கைப்பற்றியுள்ளது
எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனத்தின் 90 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ள வேதாந்தா ஸ்டார் லிமிடெட் புதிய போர்டு உறுப்பினர்களையும் நியமித்துள்ளது
வேதாந்தா குழுமம் எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனத்தினைக் கைப்பற்றியதன் மூலம் ஸ்டீல் சந்தையில் முதன் முறையாக நுழைந்துள்ளது.
எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனத்தில் தற்போது தினமும் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தித் திறன் உள்ள நிலையில் அதனை 2.5 டன்னாக உயர்த்தும் முடிவிலும் வோதாந்தா குழுமம் உள்ளது
எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனம் திவால் ஆகியுள்ள நிலையில் தேசிய கம்பனி சட்டம் தீர்ப்பாயம் வேதாந்தா குழுமம் கையகப்படுத்த சென்ற வாரம் அனுமதி அளித்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகவும் மேற்கு வங்கத்தில் உள்ள மக்களும் நிலம் கையகப்படுத்திவிட்டு வேலைத் தரவில்லை என்று பல முறை போராட்டம் நடத்தி கைதாகியுள்ளனர். வேதாந்தா குழுமம் தங்களது ஆலைகள் அமைந்துள்ள எந்த ஒரு நாட்டிலும் சரியாகச் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத நிலையில் தூத்துக்குடி போன்றே ஜாம்பியாவிலும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. அடுத்து மேற்கு வங்கத்திலும் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்கள் கிளம்ப வாய்ப்புகள் உள்ளது.
சென்ற மாதம் திவால் ஆனால் நிலையில் இருந்து பூஷன் ஸ்டீல் நிறுவனத்தினை டாடா ஸ்டீல் நிறுவனம் 35,200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது மற்றும் தற்போது வேதாந்தா குழுமம் எலெக்ட்ரோஸ்டீல் நிறுவனத்தினை வாங்கியது போன்றவற்றால் ஆர்பிஐ-க்கு இருந்த வரா கடன் பிரச்சனைகள் ஓர் அளவிற்குக் குறைந்துள்ளது.