டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசன பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம்.
ஆரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்துள்ளார்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள்நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு தான். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்ததாக இருக்கும் என்றும் கருத்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பில் அரசியல் சாசன பிரிவு 2389ஏ பற்றிய அம்சங்கள் விளக்கப்பட்டது. நீதிபதி கன்வில்கர் தனது தீர்ப்பை வாசித்தா ர்.நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் அவசியமல்ல.
இதேபோல் நீதிபதி சந்திரசூட் நிர்வாக அதிகாரம் முழுவதும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது .தனது சொந்த யோசனைகளையும் பொருத்திப் பார்த்து துணை நிலை ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…