தீவிரவாத இயக்கத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ராணுவ வீரர் இணைந்து விட்டதாக தகவல்!
தீவிரவாத இயக்கத்தில் காஷ்மீரில் காணாமல் போனதாக கூறப்பட்ட ராணுவ வீரர் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியை சேர்ந்த இத்ரீஸ்மிர் என்ற ராணுவ வீரர் சில தினங்களுக்கு முன் மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், ஹிஸ்புல் முஜாகிதின் என்ற தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியில் இருந்த இத்ரீஸ்மிர், உள்ளூர் இளைஞர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.