தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
ஜம்மு காஷ்மீரின் சோப்பூரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான பாரமுல்லாவின் சோப்பூரில் பரத்காலன் குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.