மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய மனிதப் படுகொலையை அரங்கேற்ற பாஜக அரசு திட்டமிட்டே கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் சாதாரண மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், குலாம் நபி ஆசாத்தின் கருத்து இந்திய ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை இனி ஒரு கணம் கூட சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
தீவிரவாதிகளை முற்றாக ஒழிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று கூறிய ராஜ்நாத்சிங், காஷ்மீரில் பூரண அமைதியை நிலை நிறுத்துவதுதான் மத்திய அரசின் லட்சியம் என்று தெரிவித்தார். தீவிரவாதிகளின் எந்த ஒரு வன்முறைச் செயலுக்கும் பதிலடி பலமாக இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…