தீவிரவாதத்தை ஒழிக்க துணை புரிவோம்..!! மோடி பங்கேற்ற நேபாள மாநாட்டில் தீர்மானம்.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த இரண்டு நாளாக பிம்ஸ்டெக் மாநாடட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி நேபாளம் சென்றார்..
பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், , தாய்லாந்து, மியான்மர், பூட்டான் , நேபாளம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிம்ஸ்டெக் தீர்மான பிரகடனம் வெளியிடப்பட்டது.
அதில் பிம்ஸ்டெக் நாடுகள் நடுவே சமத்துவம், எல்லை பாதுகாப்பு, அரசியல் சுதந்திரத்தன்மை, உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையிடாமல் அமைதியான இணைந்திருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றுவது.இந்த அமைப்பை மேலும் பலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து. வங்கக் கடல் பிராந்திய நாடுகளில் அமைதி நிலவவும், வளம் பெருகவும் ஒத்துழைப்பது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைக்க, பிம்ஸ்டெக் அமைப்பு ஒரு பாலம் போல செயல்படுவது. இதன் மூலமாக சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதுஎன பல தீர்மானம் முன்மொழியப்பட்டது.
குறிப்பக தீவிரவாதத்தை ஒடுக்குவது முன்னுரிமையான தீர்மானமாக கருதப்பட்டது.அதில் மனித குலத்திற்கும் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் திகழ்ந்து வருகிறது.
பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றின் நடவடிக்கைகளுக்கு, கூட்டமைப்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பது. தீவிரவாத எதிர்ப்பு என்பது அந்த அமைப்பு மீதான நடவடிக்கையாக மட்டுமின்றி, தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து அவற்றிற்கு புகலிடம் வழங்கும் நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதலில் அதுபோன்ற நாட்டை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதத்திற்கு கிடைக்கும் நிதி உதவி தடுக்கப்பட வேண்டியது முக்கியம். தீவிரவாத குழுக்களுக்கு ஆட்கள் எடுப்பதை தடை செய்ய நமது கூட்டமைப்பு நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது..
DINASUVADU