தீபக் மிஸ்ரா விவகாரம்:காங்கிரஸ் கடும் கண்டனம் !முடிவெடுக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை !

Published by
Venu

காங்கிரஸ் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கோரிய நோட்டீஸ் தொடர்பாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்,  இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகள், மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கின.

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2 தினங்களில் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளை தெரிவித்து பதவி நீக்கம் கோரப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார். எதிர்கட்சிகள் அளித்த தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்ததாகவும், தீர்மான விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டது தவறான நடைமுறை எனவும் அவர் கூறினார்.

தங்கள் கோரிக்கை நிராரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா கூறியுள்ளதாவது:

‘‘மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை. நீதித்துறை குழுவிடம் கருத்து கேட்டுக்கப்படவில்லை.  இது உண்மையில் நிராகரிக்கும் ஜனநாயகத்திற்கும், மீட்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போராகும்.

64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே, ‘இது பழிவாங்கும் நோட்டீஸ்’ என நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்தார். இதன் மூலம் மத்திய அரசின் எண்ணம் வெளிப்படுகிறது. அரசியல் சாசன செயல்பாடுகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயலுகிறது. இதனை முறியடிப்போம்’’ எனக் கூறினார்.

அதேசமயம் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கை, எம்.பிக்களின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்பதால் வெங்கய்ய நாயுடு கோரிக்கையை நிராகரித்து சரியான முடிவை எடுத்துள்ளார் என முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலிப் சொராப்ஜி கூறியுள்ளார்.

இதுபோலவே வெங்கய்யா நாயுடுவின் முடிவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வரவேற்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

8 mins ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

49 mins ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

50 mins ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (11/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

50 mins ago

“டெல்லி கணேஷ் மறைவு வேதனை அளிக்கிறது”! தவெக தலைவர் விஜய் இரங்கல்!

சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.…

1 hour ago

“அதிமுகவுடன் கூட்டணி சிறப்பாக உள்ளது”…தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு!

சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை…

2 hours ago