மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அளித்த கண்டனத் தீர்மான நோட்டீசை நிராகரித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மனுக் கொடுத்தனர். இதில், காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
இந்த நோட்டீசை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று டெல்லி விரைந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களவையின் முன்னாள் செயலாளரான சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா, நாடாளுமன்ற செயலகத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் மற்றும் மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகளை அவர் அழைத்துப் பேசினார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோருடனும் வெங்கைய நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் வழங்கிய கண்டனத் தீர்மான நோட்டீசை நிராகரிப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…