தீபக் மிஸ்ராவிற்கு எதிரான தீர்மானம்!நிராகரித்தார் வெங்கய்ய நாயுடு

Default Image

மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அளித்த கண்டனத் தீர்மான நோட்டீசை  நிராகரித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மனுக் கொடுத்தனர். இதில், காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

இந்த நோட்டீசை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து, மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று டெல்லி விரைந்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்களவையின் முன்னாள் செயலாளரான சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா, நாடாளுமன்ற செயலகத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் மற்றும் மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகளை அவர் அழைத்துப் பேசினார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோருடனும் வெங்கைய நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் வழங்கிய கண்டனத் தீர்மான நோட்டீசை நிராகரிப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்