திருமலையில் நேற்று முதல் வந்த புதிய வசதி..!
திருமலையில் நேற்று முதல் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற்காலி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு திருமலையில் நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக நாற்காலிகளை ஏற்பாடு செய்ய தேவஸ் தானம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.கூட்ட நெரிசலை தடுக்கவும் , வசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்கள்.
திருப்பதி ஏழுமாலையானுக்கு தினமும் 30 முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலை முடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர். திருமலையில் இதற்காகவே ‘கல்யாண கட்டா’ எனும் இடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.