கேரளாவில் திருமண விழாக்களின் போது எடுக்கப்பட்ட மணப்பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாச இணையதளங்களில் பரவ விட்டிருக்கும் அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் Sadayam Shoot & Edit என்ற ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு மிகவும் புகழ்பெற்ற ஸ்டூடியோவாக இது விளங்கி வருகிறது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் வலம்வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அப்பெண், திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்த புகைப்படங்களை Sadayam ஸ்டூடியோவைச் சேர்ந்தவர்கள் மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுருப்பதாக அந்த ஸ்டூடியோவிற்கு எதிராக அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
Sadayam ஸ்டூடியோவின் உரிமையாளர்களான தினேசன் மற்றும் சதீசன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், பிபேஸ் என்பவர் தலைமறைவாக உள்ளார். அந்த ஸ்டூடியோவில் இருந்து பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட 40,000 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து வெளியான தகவல்கள் அப்பகுதியினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த கேரளத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்காக Sadayam ஸ்டூடியோவினரை பணியமர்த்திய குடும்பத்தினர் மத்தியில் இத்தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தங்கள் வீட்டு பெண்களின் புகைப்படங்களும் மார்ஃபிங் செய்யப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பானுமதி கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…