திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…!!
திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை கார் தன்டா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நதீம் மன்சூரி (வயது29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அவளை கண்டித்தனர்.
அதே நேரத்தில் நதீம் மன்சூரி நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சிறுமியுடனான காதலை தொடர்ந்தார். மேலும் இருவருக்கும் உடல் ரீதியாகவும் நெருக்கம் உண்டானது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானாள்.
அண்மையில் வயிற்று வலியால் துடித்த சிறுமியை, தாய் கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தார். அப்போது, அவள் 15 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.வாலிபர் கைது இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர், இதுபற்றி கார் போலீசில் நதீம் மன்சூரி மீது புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், நதீம் மன்சூரி ஏற்கனவே திருமணமானவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
dinasuvadu.com