Categories: இந்தியா

திருமணம் முடிந்து 6 மாதத்தில் விவாகரத்து கேட்கும் முன்னாள் முதல்வரின் மகன்..!!

Published by
Dinasuvadu desk
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பீகாரில் பிரதான கட்சிகளின் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவுக்கும் , பீகார் முன்னாள் மந்திரியின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது. தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாட்னா நீதிமன்றத்தில், விவகாரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் மனு தாக்கல் செய்து இருப்பதாக செய்தி பரவியதும், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் உடனடியாக தேஜ் பிரதாப் யாதவின் தாயார் ராப்ரி தேவி வீட்டுக்குச்சென்றார். இதற்கிடையே, சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவும், தேஜ் பிரதாப் யாதவ் உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விவாகரத்து மனுவை வாபஸ் பெற வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த விவகாரம் குறித்து, லாலு குடும்பத்தினர் வேறு யாரேனும் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.
மே 12-ம் தேதி நடந்த தேஜ் பிரதாப் – ஐஸ்வர்யா ராய் திருமணத்தில் சுமார் 10 ஆயிரம் வி.ஐ.பி.-க்கள் கலந்து கொண்டனர். பீகார் கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் லாலு மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர். லாலுவின் 2-வது மகன் தேஜஸ்வி யாதவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் தற்போது கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க தேர்தலில் தோல்வி! நாளை பேசும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…

2 hours ago

2026-ல் கூட்டணி ஆட்சியா.? கையெடுத்து கும்பிட்டு கிளம்பிய திருமா.!

அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…

2 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

3 hours ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

3 hours ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

4 hours ago