திருமணம் ஆகவில்லை….குறை பிரசவ குழந்தை….கழிவறை கோப்பைக்குள் வீசிய 19 வயது பெண் கைது…!!

Default Image
குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசிய கொலை செய்த  இளம் பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
மும்பை அம்போலி பகுதியில் உள்ள பொது கழிவறையில் இருந்து இளம்பெண் ஒருவர் ரத்தக்கறையுடன் ஓடினார்.அந்த பெண் ஓடியதை கவனித்த அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த்து  அந்த இளம்பெண்ணை விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் தெரியவந்தது , அதில் அவரது பெயர் சுவர்ணா இந்த பெண்ணுக்கு வயது19 என்பதும்,இந்த பெண் ரத்னகிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் நடத்திய விசாரணையின் அடிப்படையில் , சுவர்ணா திருமணமாகாமல் கர்ப்பம் அடைந்துள்ளார்.அவர் அந்தேரி மேற்கு மடார்பாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து போது , இரவில் யாரிடமும் சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற நாளன்று அம்போலி பொது கழிவறையில் சுவர்ணா-வுக்கு  குறைபிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த  சுவர்ணா வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக குழந்தையை கழிவறை கோப்பைக்குள் வீசி தண்ணீர் ஊற்றிவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது  கழிவறையில் இருந்தவர்கள் சுவர்ணா ரத்தக்கறையுடன் இருந்ததை பார்த்து சுவர்ணா-விடம் கேட்டு உள்ளனர். இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.அப்போது அங்கிருந்த  பொதுமக்களும் விரட்டி சென்று சுவர்ணா-வை பிடித்தனர்.மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிரைந்து வந்த போலீசார் சுவர்ணாவை கைது செய்தனர். கழிவறை கோப்பையில் வீசப்பட்ட குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு சுவர்ணாவின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்