திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது..!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ந்தேதி அகற்றப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து 24-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும், வஜ்ஜிர கவசம் அணிவிக்கப்படுகிறது. வஜ்ஜிர கவசத்துடன் உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 2-வது நாளான 25-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

3-வது நாளான 26-ந்தேதி உற்சவர் மலையப்பசாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்படும் தங்கக் கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே அகற்றப்படாமல் இருக்கும்.

ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 24-ந்தேதி வசந்த உற்சவம், 25-ந்தேதி விசே‌ஷ பூஜை, வசந்த உற்சவம், 26-ந்தேதி அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட 3 நாட்கள் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமால சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களுக்கு தரிசன அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்