திருப்பதி கோயிலில் பரபரப்பு !ரூ.500 கோடி மதிப்புமிக்க வைரம் மாயம்?
ரூ.500 கோடி மதிப்புமிக்க பிங்க் நிற வைரம் ,ஆந்திர மாநிலம், திருப்பதியில் திருமலா திருப்பதி கோயிலில் மாயமாகி உள்ளது, ஏராளமான நகைகள் காணாமல் போயுள்ளதாக கோயிலின் அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
ஆந்திர மாநில அரசு சமீபத்தில் அர்ச்சகர்களுக்கான ஓய்வு வெறும் வயது 65 ஆக நிர்ணயித்தது. அதன் அடிப்படையில் அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு (வயது69) பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இந்தப் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை வருகின்றனர். நாட்டிலேயே மிகவும் பணக்கார கோயிலாகவும், அதிகமான வருவாய் ஈட்டித்தரும் கோயிலாகவும் திருப்பதி இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, கோயில் அர்ச்சகர்களுக்கான வயதை நிர்ணயித்தது. இந்து அறநிலையத்துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு கோயில் அர்ச்சகர்களுக்கான வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய முறையில் ஆந்திராவில் அரசு நிர்வகிக்கும் கோயில்களில் ஏராளமான அர்ச்சகர்கள் வேலையிழந்தனர்.
திருப்பதி கோயிலில் இதேபோல அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு என்பவரும் பணி இழந்தார். அவர் ஊடகங்களிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையானுக்குப் பிளாட்டினத்தில் செய்யப்பட்ட ஒரு விலைமதிப்புள்ள ஒரு நெக்லஸும் விலைமதிப்பில்லா பிங்க் நிறத்திலான வைரமும் பதிக்கப்பட்டு இருக்கும். அந்த நெக்ஸல் திடீரென மாயமானது. ஆனால், அதேபோன்ற பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பிங்க் நிறவைரம் பதித்த நெக்லஸ் ரூ.500 கோடிக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பக்தர்கள் அளித்த ஏராளமான நகைகள் கடந்த 1996-ம் ஆண்டு காணாமல் போயுள்ளன, அது குறித்து வெளியே யாரும் புகார் சொல்வதில்லை. இதற்கு முன் பொறுப்பில் இருந்த தலைமை அர்ச்சகர்கள், மத்திய அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாகக் கைகோர்த்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
நகைகள் காணாமல் போன விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உண்டு என சந்தேகிக்கிறேன். அதுமட்டுமல்லாமல் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோயிலின் ஆகம விதிகளை மீறி, கோயிலின் சமையல் செய்யும் இடமான மடப்பள்ளியில் புதையில் இருக்கும் என்று அங்குத் தோண்டியுள்ளார். இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கடந்த 15-ம் தேதி திருப்பதிக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தும் அர்ச்சகர் ரமணா தீக்சித்துலு இந்த புகாரைத் தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.