திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை….ஆந்திரா எம்.எல்.ஏ அனிதா…!!
திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர எம்எல்ஏ அனிதா வலியுறுத்தி உள்ளார்.
திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர எம்எல்ஏ அனிதா வலியுறுத்தி உள்ளார்.தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அனிதா, இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருமலை மிகவும் புனிதமான தலம் எனவும், இங்கு அரசியல் பேச தடை இருப்பதாகவும் தெரிவித்தார். திருமலைக்கு வரும் நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா, செய்தியாளர் சந்திப்பில் அரசியல் பேசுவதால், அவருக்கு திருப்பதி கோவிலுக்கு வர தடை விதிக்க வேண்டும் என அனிதா கூறினார்.இது தொடர்பாக, தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
dinasuvadu.com