Categories: இந்தியா

திருநங்கை ஆசிரியை வேதனை..!

Published by
Dinasuvadu desk
திருநங்கைகளை அரசுக்கள், நீதிமன்றங்கள் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் இன்னும் மோசமான பார்வையை எதிர்க்கொண்டுதான் வருகிறார்கள். பல்வேறு துறைகளில் அவர்கள் சாதித்தாலும் சமூகத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் துன்பங்களில் எந்தஒரு மாற்றமும் இல்லாமல் தான் செல்கிறது. இதில் திருங்கை ஆசிரியை சுஜித்ரா தேயும் விதிவிலக்கல்ல. கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியர் ஹிரன்மாய் தேய் ஆங்கிலம் மற்றும் புவியியலில் முதுகலைப் பட்டம் முடித்து, ஆசிரியர் பயிற்சி படித்தவர். அங்குள்ள பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு திருநங்கையாக மாறிக்கொண்டார். இதனையடுத்து அவர் தன்னுடைய பெயரை சுஜித்ரா தேய் என மாற்றிக்கொண்டார்.
இதனையடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான சூழ்நிலையில் போராடி வந்துள்ளார். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது என்னிடம் மோசமான கேள்விகள் எழுப்பட்டாலும் “குழந்தைகள் அனைவரும் என்னை மனித நேயத்துடன்தான் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள்,” சிறு மகிழ்ச்சியை உதிர்க்கிறார். பள்ளிக்கூடம் ஒன்றில் இப்போது ஆசிரியையாக பணியாற்றிவரும் சுஜித்ரா தேய் பேசுகையில் கொல்கத்தாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் நேர்முகத் தேர்வுகளுக்கு சென்ற போது பாலியல் தொடர்பாக எவ்வளவு மோசமான கேள்விகள் எழுப்பட்டது என்பதை வேதனையுடன் பதிவு செய்தார்.
என்னுடைய மார்பகம் உண்மையானதா?  பாலியல் உறவுக்கு அடுத்து என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றெல்லாம் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பினார்கள். என்னுடைய சான்றிதழில் ஆண் என குறிப்பிடப்பட்டு இருந்தது போன்று ஆண்களுக்கான ஆடையை மட்டும் அணிய கூறினார்கள் என்கிறார். கொல்கத்தாவில் பல்வேறு பள்ளிகளுக்கு சென்ற போது எல்லாம், ஆசிரியராக என்னுடைய தகுதி என்ன என்பதை பார்க்க எல்லோரும் பார்க்க தவறிவிட்டார்கள், மாறாக பாலியல் என என்னை அவமானப்படுத்தும் கேள்விகளை மட்டும் எழுப்பினார்கள் என்கிறார்.
நான் எதிர்க்கொண்ட மற்றும் எதிர்க்கொள்ளும் பாகுபாடுகள் அனைத்தும் அதிகம் படித்த நடுத்தர வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்துதான். படித்த அவர்கள்கூட அநீதியை தவிர்க்க முடியவில்லை. ஆசிரியராக இருக்கும் நானே பாகுபாட்டால் எரிந்து வருகிறேன். இதில் அதிர்ஷ்டமில்லாத மற்றும் ஆதரவு கிடைக்காதவர்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் மிகவும் ஒதுக்கப்படுகிறோம், இதனை நிறுத்த வேண்டிய காலமாகும் என்று கூறியுள்ளார் சுஜித்ரா தேய். “பெற்றோர் மத்தியில் அவர்களுக்கான பார்வையிருக்கலாம், இருப்பினும் குழந்தைகள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக ஏற்றுக்கொண்டால் அதைவிட எனக்கு வேறு எதுவும் விஷயம் கிடையாது. குழந்தைகள் என்னை பாரபட்சமின்றிதான் பார்க்கிறார்கள்,” என்று குழந்தைகள் காட்டும் அன்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

8 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

9 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

9 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

9 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

11 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

12 hours ago