கொட்டித்தீர்த்த கனமழையால் திரிபுராவில் ஏற்பட்ட வெள்ளத்தால், அம்மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹவுரா நதியில், அபாய அளவை தாண்டை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் வெளியேற்றப்படு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில், இடைநிற்றலின்றி மழை கொட்டித்தீர்த்ததால், சந்திரப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. ஹவுரா மட்டுமின்றி, கோமதி, டியோ, மானு (( Gomati, Deo, Manu )) ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரள்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.