திரிபுராவின் பொறுப்பு ஆளுநராக மேற்கு வங்க ஆளுநர் நியமனம்..!
திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ததாகதா ராய் நீண்ட மாத விடுமுறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி, மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் கேசரி நாத் திருப்பதியை நியமித்துள்ளார்.
முன்னதாக பொறுப்பு ஆளுநர் பதவி ஏற்க வந்த மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திருப்பதியை, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் மற்றும் கேபினெட் அமைச்சர்கள் ஆகியோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.
பின்னர் ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி முன் திருப்பதி பொறுப்பு ஆளுநராக பதவியேற்று கொண்டார்.