திண்டுக்கல் அருகே ஃபேஸ்புக் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!
ஃபேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு எழுந்ததால், விரக்தியில், பெண்ணின் வீட்டு முன்பு கத்தியால் குத்திக்கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞரும் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார், பெண்ணின் வீட்டு முன்பு கத்தியால் தனது வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.