பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் என்று முத்துக்கருப்பன் எம்பி தெரிவித்துள்ளார்..உச்சநீதிமன்ற உத்தரவு வரும்வரை பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முத்துக்கருப்பன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அவர் முத்துக்கருப்பன் எம்பி கூறியது ,
தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்கிறேன்.முதல்வர் பழனிசாமி அழைத்து என்னை சமாதானம் செய்வார் என்பதால் எனது மொபைல் போனை அணைத்து வைத்து விட்டேன். யார் சொன்னாலும் எனது முடிவில் பின்வாங்கவோ, சமாதானம் அடையவோ மாட்டேன். காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. அரசியலுக்காக குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்னால் இதைத்தான் செய்ய முடியும். இரு மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் பிரச்னையை தீர்க்க வேண்டும்.காவிரி பிரச்னையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் என்று முத்துக்கருப்பன் எம்பி தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவு வரும்வரை பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முத்துக்கருப்பன் எம்பி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…