திடீர் உடல் நலக்குறைவால் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி நகரின் ஹோட்வார் பகுதியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் இருந்து தண்டனை கைதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக ராஞ்சி நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் தீர்மானித்தனர். சிறை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக லாலுவை கொண்டு சென்ற வாகனம் நுழைந்தது.
ராஞ்சி மருத்துவ அறிவியல் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள இதயநோய் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பீகார் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், லாலுவின் மூத்த மகனுமான தேஜஸ்வி பிரசாத் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…