திடீர் உடல் நலக்குறைவால் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

Default Image

திடீர் உடல் நலக்குறைவால் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ்  நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி நகரின் ஹோட்வார் பகுதியில் உள்ள பிர்சா முன்டா சிறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் இருந்து தண்டனை கைதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக ராஞ்சி நகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைக்க சிறை அதிகாரிகள் தீர்மானித்தனர். சிறை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக லாலுவை கொண்டு சென்ற வாகனம் நுழைந்தது.

ராஞ்சி மருத்துவ அறிவியல் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள இதயநோய் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பீகார் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியும், லாலுவின் மூத்த மகனுமான தேஜஸ்வி பிரசாத் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்