தாடி இருப்பதாக கூறி விவாகரத்து கேட்ட கணவர்..!
விவாகரத்து இந்த காலக்கட்டத்தில் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், விவாகரத்து செய்து விடுகின்றனர். விவாகரத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு வழக்கிலும் வேறுபடும்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் என் மனைவியின் முகத்தை திருமணத்திற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. அவளின் முகத்தில் ஆண்களை போல் தாடி வளர்ந்துள்ளது. மேலும், குரலில் ஆண் தன்மை தெரிகிறது.
அதனால் நான் விவாகரத்து செய்ய விரும்புகிறேன் எனக்குறிப்பிட்டிருந்தார். அதனை விசாரணை செய்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதற்கு பதில் அளித்த அவரது மனைவி, ஹார்மோன் பிரச்சனையால் என் முகத்தில் முடி வளர்ந்துள்ளது. அதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ஆனால் என் கணவர் விவாகரத்து வேண்டி பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளார் என கூறினா