தாஜ்மகாலை இடித்து விடுங்கள்…!உச்சநீதிமன்றம் ஆவேசம்
தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆவேசமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆகும்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.