தலைமைத் தேர்தல் ஆணையர் அதிரடி அறிவிப்பு..!
தேர்தல் முறைகேடுகளைச் சான்றுகளுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து வீடியோ சான்றுகளுடன் புகார் தெரிவிக்கத் தேர்தல் ஆணையம் ஒரு செல்பேசிச் செயலியை வெளியிட்டுள்ளது. அந்தச் செயலி மூலம் கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் முறைகேடுகள் குறித்து 780புகார்கள் பெறப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புகார் அளித்தவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர்களின் விவரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது என்று அவர் உறுதியளித்தார். நெடுங்காலமாகத் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்காத ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்தார்.