தலைமைச் செயலாளரைத் தாக்கிய வழக்கில் கெஜ்ரிவால் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தவிர்த்தார்!

Default Image

தலைமைச் செயலாளரைத் தாக்கியதாகத் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தவிர்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி அரசின் தலைமைச் செயலாளரான அன்ஷு பிரகாஷ் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்ற போது, ஆம் ஆத்மி பிரமுகர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளின் பதிவுகள் அடங்கிய டி.வி.ஆர்.ஐயும் அவர்கள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டெல்லி காவல்துறை அதிகாரி ஹரிந்தர் சிங், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பு அளித்தாகவும், இருப்பினும் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தவிர்த்ததாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்