தமிழக பள்ளி பாடங்களில் உள்ள முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம்-உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா
தமிழக பள்ளி பாடங்களில் உள்ள கியூஆர் கோட் முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம் என்று அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது . தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை விருப்ப மொழிகளாக வைத்துள்ளோம்.
தமிழக பள்ளி பாடங்களில் உள்ள கியூஆர் கோட் முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.