தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு…!மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு…!
உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கூடாது என தமிழக அரசு அளித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் மனுக்களை வரும் 9ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்ற கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது. உச்ச நீதிமன்றம் கெடு முடிந்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்ததால் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.