இதேபோன்று,வாகன தணிக்கை கடப்பா மாவட்டம் வாக்கட்டி கோணா என்ற இடத்தில் நடைபெற்றது. அப்போது, இரண்டு வாகனங்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், கடப்பாவைச் 2 லட்சுமையா மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், செம்மரக் கடத்தலில் அதிக பணம் கிடைப்பதை அறிந்து, கடந்த 8 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறினர்.