தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சுதாகரன் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு!
தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகரன் பதவி ஏற்றுக் கொண்டார்.
இம்பால் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராமலிங்கம் சுதாகரன் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ராமலிங்கம் சுதாகரன், ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இப்போது அந்த பொறுப்பை ஏற்று உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.